VETTAI KARAN
           Song: Oru Chinna Thamarai




ஒரு  சின்ன  தாமரை  என்  கண்ணில்  பூத்ததே
அதன்  மின்னல்  வார்த்தைகள்  என்  உள்ளம்  தேடி  தைக்கின்றதே
இதை  உண்மை  என்பதா  இல்லை  போய்தான்  என்பதா
என்  தேகம்  முழுவதும்
ஒரு  விண்மீன்  கூட்டம்  மொய்க்கின்றதே 
என்  ரோம  கால்களோ  ஒரு  பயணம்  போகுதே
உன்  ஈரப்  புன்னகை  சுடுதே
என்  காட்டுப்  பாதையில்  நீ  ஒற்றை  பூவட
உன்  வாசம்  தாக்கியே  மலர்ந்தேன்

ஒரு  சின்ன  தாமரை  என்  கண்ணில்  பூத்ததே
அதன்  மின்னல்  வார்த்தைகள்  என்  உள்ளம்  தேடி  தைக்கின்றதே

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

yea let's do this
oh

chikki chaan chikki chikki chaan
chikka chik chak chikki chikki chaan
chikki chaan chikki chikki chaan
chiki chikkakka chikkaaka chaan hey

உன்  பெயர்  கேட்டாலே  அடி  பாறையில்  பூ  பூக்கும்
உன்  கால்  அடி  தீண்டிய  வார்த்தை  எல்லாம்
கவிதைகளாய்  மாறும்
உன்  தெரு  பார்த்தாலே  என்  கண்கள்  அலை  மோதும்
உன்  வாசல்  தேடி  போக  சொல்லி  கெஞ்சுது  என்  பாதம்
என்  வாழ்க்கை  வரலாற்றில்  எல்லாமே   உன்  பக்கங்கள்
உன்னாலே  என்  வீட்டின்  சுவர்  எல்லாம்  ஜன்னல்கள்

ஒரு  சின்ன  தாமரை  என்  கண்ணில்  பூத்ததே
அதன்  மின்னல்  வார்த்தைகள்  என்  உள்ளம்  தேடி  தைக்கின்றதே  ஹே

what you gonna say chennai good flyer
pennai paakkumpothu paththikkichchu fever hey
vinnai thara vanthu amainjathu flyer
thanni pol theriyuthu kaathal oru fire
oh....

உன்  குரல்  கேட்டாலே  அந்த  குயில்களுக்கும்  கூசும்
நீ  மூச்சினில்  சுவாசித்த  காற்றுகள்  மட்டும்
மோட்ச்சத்தினை  சேரும்
அனுமதி  கேட்க்காமல்  உன்  கண்கள்  எனை  மேயும்
நான்  இத்தனை  நாளாய்  எழுப்பிய  கோபுரம்
நொடியில்  கோடை  சாயும்
உன்  கைகள்  கோர்க்காமல்  பயங்கள்  கிடையாது
உன்னோடு  வந்தாலே  சாலைகள்  முடியாது

ஒரு  சின்ன  தாமரை  என்  கண்ணில்  பூத்ததே
அதன்  மின்னல்  வார்த்தைகள்  என்  உள்ளம்  தேடி  தைக்கின்றதே
இதை  உண்மை  என்பதா  இல்லை  போய்தான்  என்பதா
என்  தேகம்  முழுவதும்
ஒரு  விண்மீன்  கூட்டம்  மொய்க்கின்றதே 
என்  ரோம  கால்களோ  ஒரு  பயணம்  போகுதே
உன்  ஈரப்  புன்னகை  சுடுதே
என்  காட்டுப்  பாதையில்  நீ  ஒற்றை  பூவட
உன்  வாசம்  தாக்கியே  மலர்ந்தேன்

ஒரு  சின்ன  தாமரை  என்  கண்ணில்  பூத்ததே
அதன்  மின்னல்  வார்த்தைகள்  என்  உள்ளம்  தேடி  தைக்கின்றதே


 Movie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Kannukkul kannai
Singers:Naresh Iyer
Music Director:A.R.Rahman
Lyrics:Thamarai


பல்லவி


கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்

இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?

ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?



உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா



கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்



நீயும் நானும் ஒரே புள்ளி

ஒரே கொடு நீயும் நானும்

வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு

காதல் என்றால் காயம் தான்



அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து



காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று

அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து

காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று



கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்



உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா


 Movie Name:Vinnai thaandi varuvaaya
Song name:Anbil avan
Singers:Ekambaram,Chinmayee
Music Director:A.Rahman






அன்பில்  அவன் , சேர்த்த  இதை , மனிதரே  வெறுக்காதீர்கள்  ..
வேண்டும்  என , இணைத்த  இதை ,
வீணாக  மிதிக்காதீர்கள் ..
உயிரே  உன்னை  உன்னை  எந்தன் ,
வாழ்கை  துணையாக ,
ஏற்கின்றேன்  ஏற்கின்றேன் ..
இனிமேல்  புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை  இவை ,
ஒன்றாக  கடப்போமே ..
உன்னை  தாண்டி  எதையும் ..
என்னால்  யோசனை  செய்ய ..
முடியாதே  முடியாதே ..

நீ  வானவில்லாக   அவள்  வண்ணம்  ஏழாக ,
அந்த  வானம்  வீடாக ,
மாறாதோ  மாறாதோ ..
ஹ்ம்ம்  ஜோடி  போட்டு தான்  ஹ்ம்ம்  நீங்கள்  போனாலே ,
கண்  பட்டு  காய்ச்சல் தான் ,
வாராதோ  வாராதோ ..

உயிரே  உன்னை  உன்னை  எந்தன் ,
வாழ்கை  துணையாக ,
ஏற்கின்றேன்  ஏற்கின்றேன் ..
இனிமேல்  புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை  இவை ,
ஒன்றாக  கடப்போமே ..

நீளும்  இரவில்  ஒரு  பகலும் ,
நீண்ட  பகலில்  சிறு  இரவும் ..
கண்டு  கொள்ளும்  கலை  அறிந்தோம் ,
எங்கு  என்று  அதை  பயின்றோம் ..
பூமி  வானம்  காற்று ..
தீயை  நீரை  மாற்று ..
புதியதாய்  கொண்டு  வந்து  நீட்டு ..

நீ  வானவில்லாக  அவள்  வண்ணம்  ஏழாக ,
அந்த  வானம்  வீடாக ,
மாறாதோ  மாறாதோ ..
ஹ்ம்ம்  ஜோடி  போட்டு தான்  ஹ்ம்ம்  நீங்கள்  போனாலே ,
கண்  பட்டு  காய்ச்சல் தான் ,
வாறதோ  வாறதோ ..
உயிரே  உன்னை  உன்னை  எந்தன்
வாழ்கை  துணையாக
ஏற்கின்றேன்  ஏற்கின்றேன்
இனிமேல்  புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை  இவை
ஒன்றாக  கடப்போமே ..
உன்னை  தாண்டி  எதையும் ..
என்னால்  யோசனை  செய்ய ..
முடியாதே  முடியாதே ..
நீ  வானவில்லாக  அவள்  வண்ணம்  ஏழாக ,
அந்த  வானம்  வீடாக ,
மாறாதோ  மாறாதோ ..
ஹ்ம்ம்  ஜோடி  போட்டு தான்  ஹ்ம்ம்  நீங்கள்  போனாலே ,
கண்  பட்டு  காய்ச்சல் தான் ,
வாராதோ  வாராதோ ..
ஒ  ஒ …

காதல்  எல்லாம்  தொலையும்  இடம் ,
கல்யாணம்  தானே ..
இன்று  தொடங்கும்  இந்த  காதல் ,
முடிவில்லா   வானே ..

பாடல்:
காதலெனும் தேர்வெழுதி
குரல்:
எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
வரிகள்:
வாலி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
ஆஆஆ...

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ

இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா

இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை

கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

ஆஆஆ...


ரிதம்
ஏ ஆர் ரஹ்மான்
(2000)

பாடல்:நதியே நதியே காதல் நதியே
குரல்:உன்னி மேனன், குழுவினர்
வரிகள்:வைரமுத்து

நீர்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

About Me

My photo
chennai, Tamil nadhu, India
விஜய் பாரதி MCA, Film Editor-Avid,FCP and become a Film Director

தமிழ் பாடல் @ வரிகள்

ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?

SONGS

fav songs